விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தமிழக அரசை கண்டிப்பது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நலனுக்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க. செயல்பட்டு வருவதாக கூறி அதனை கண்டித்து பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர், குறித்தும் கனிமொழி எம்பி குறித்தும் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக விக்கிரவாண்டி திமுக நகர துணைச் செயலாளர் சித்ரா புகார் அளித்ததன் பேரில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலியவரதனை கைது செய்து விக்கிரவாண்டி போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்