புதுச்சேரியில் அதிர்ச்சி... வழக்கு பதிவில் முதலிடம் பிடித்த காவல் நிலையம் ; முழு விவரம்...
காவல் நிலையங்கள் வாரியாக குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட காவல் நிலையங்கள் பட்டியலில் வில்லியனூர் காவல் நிலையம் 335 வழக்குகள் பதிந்து முதலிடம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இந்தாண்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் காவல் நிலையங்கள் வாரியாக குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட காவல் நிலையங்கள் பட்டியலில் வில்லியனூர் காவல் நிலையம் 335 வழக்குகள் பதிந்து முதலிடத்தில் உள்ளது
வில்லியனூர் காவல் நிலையம் 335 வழக்குகள் பதிந்து முதலிடம்
புதுச்சேரியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மீது புதிய பிஎன்எஸ் சட்டத்தின்படி காவல் நிலையங்களில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இந்தாண்டு பெரும்பாலான பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. இதனிடையே 2025ம் ஆண்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் காவல் நிலையங்கள் வாரியாக குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட காவல் நிலையங்கள் பட்டியலில் வில்லியனூர் காவல் நிலையம் 335 வழக்குகள் பதிந்து முதலிடத்தில் உள்ளது.
குற்ற சம்பவங்கள் கிராமங் களை விட நகர பகுதியில் தான் அதிகளவில் நடக்கிறது
அடுத்தபடியாக பெரியக்கடை காவல் நிலையம் 219 வழக்குகள் பதிந்து இரண்டாம் இடமும், உருளையன் பேட்டை 214 வழக்குகள் பதிந்து மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. மேலும், ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் 213 வழக்குகளும், முதலியார்பேட்டை 209 வழக்குகளும், ஒதியஞ்சாலை 202 வழக்குகளும், லாஸ்பேட்டை 198 வழக்குகளும், தன்வந்திரி 186 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பெரும்பாலும் குற்ற சம்பவங்கள் கிராமங் களை விட நகர பகுதியில் தான் அதிகளவில் நடக்கும். ஆனால் இந்தாண்டு நகர பகுதிகளை விட கிராமப் பகுதிகளில் அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதிலும் வில்லியனூர் காவல் நிலையம் புதுவை மாநிலத்திலேயே அதிக குற்றச் சம்பவங்களுக்காக அதிக வழக்குகள் பதிந்து முதலிடத்தில் உள்ளது.
போலீசார் கண்டும் காணாமல்!
இதேபோன்று கடந்தாண்டு வில்லியனூர்-397, பெரியக்கடை-249, உருளையன்பேட்டை-263, ரெட்டியார்பாளையம் - 269, முதலியார்பேட்டை-274, ஓதியஞ்சாலை-247, லாஸ்பேட்டை-224 வழக்குகள் பதியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருவதால் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது.
எனவே அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் காவல் துறை உயர் அதிகாரிகள் வில்லியனூர் காவல் நிலையம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















