விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவாகியது அதில். 1,95,495 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு என்னும் மைய்யமான பனையபுரம் அரசு பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணப்படும்.
விக்கிரவாண்டி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையானது 14 மேசைகளில் 20 சுற்றுகளாக நடைபெறும். மேலும் இதில் மேசை ஒன்றுக்கு மேற்பார்வையாளர், உதவியாளர் நுண் பார்வையாளர் தல ஒருவர் நியமனம். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மேஜைகளில் நடைபெற்றது. பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் பகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிக்கு 14 கிராம உதவியாளர்கள் வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள் இதர பணியாளர்கள் என சுமார் 150 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் 3 ஆண்டுகள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணமடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதற்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதியன்று நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. தபால்வாக்குகளில் திமுக முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. பாமக வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார்.
29 வேட்பாளர்கள் போட்டி
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதியுடன் முடிவடைந்தது. 24-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 26-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த 11 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேரும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்..
விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்
இவர்களை தேர்வு செய்ய இத்தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் 1,95,495 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலை நடத்த 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது, இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான பேலட் யூனிட், கட்டுப்பாட்டு எந்திரமான கன்ட்ரோல் யூனிட், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் என 1,104 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
82.48% வாக்குகள் பதிவு
இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது, ஒரு சில வாக்கு சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளது அதில். 1,95,495 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மொத்தம் 276 வாக்கு சாவடி மையங்களில் இருந்து வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.