Breaking Tamil LIVE: கர்நாடகா- காவிரியில் 20, 547 கன அடி நீர் திறப்பு
Vikravandi By Election Result 2024 LIVE Updates: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல்களை உடனடியாக அறிய ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் பதிவு!
"கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்தது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Breaking Tamil LIVE: கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியில் 20, 547 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இது வரையில், இல்லாத அளவாக, பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு, நேற்று ஒரே நாளில் ₹224.26 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தகவல்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி.. அரைசதம் கடந்து விளையாடி வருகிறார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3 ODI மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
Breaking Tamil LIVE: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணிக்குள் திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுக்கால சிறப்பான ஆட்சியே காரணம்” திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி சான்றிதழைப் பெற்றபின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு!
1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்.
எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!
திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும் எனவும், தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதது வெட்கக்கேடானது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Vikravandi By Election Result LIVE:பாமகவுக்கு டெபாசிட் கிடைத்ததே பெரிய விசயம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும் எனக்கு டாக்டர் ராமதாஸ் மீது மிகுந்த மரியாதை உள்ளது எனவும், தேர்தலில் மாறி மாறி கூட்டணி வைப்பார் ராமதாஸ் எனவும், அவருக்கு கொள்கைகள் கிடையாது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Vikravandi By Election Result LIVE: வெற்றிக்கு முக்கிய காரணம் முதலமைச்சர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
Vikravandi By Election Result LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிச் சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்றுள்ளார்.
பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 பெற்றுள்ளார்
நாம் தமிழர் அபிநயா 10,602வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அபிநயா 10602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்
Vikravandi By Election Result LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாமக 2 ம் இடம் பிடித்த நிலையில் 2026 ல் பாமக-வுக்கு வெற்றி உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பணத்தை வைத்து திமுக வென்றுள்ளது, உண்மையான வெற்றி பாமக-வுக்குத்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்றது தேர்தல் அல்ல, ஏலம் என்று நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் வெற்றி, 3 ஆண்டுகால சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தெரிவித்துள்ளார். மேலும் வாக்களித்த மக்களுக்கும், களப்பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூன்றாம் இடம் நாம் தமிழர் கட்சி பிடித்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் தெரிவித்ததாவது, இது எங்களுடைய தோல்வி இல்லை, மக்களுடைய தோல்வி. மேலும் இது பணநாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம் என்றும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா தெரிவித்தார்.
Vikravandi By Election Result LIVE: விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியதில் மன நிறைவு என்றும் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
18-வது சுற்று வாக்குகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக - 6793
பாமக - 2331
நாம் தமிழர் - 646
மொத்தமாக திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 113701
பாமக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 50454
நாம் தமிழர் வேட்பாளர் 9740
வித்தியாசம் 63247 வாக்குகள் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவை ஏற்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 94 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று பிரம்மாண்ட முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. கடமைப்பட்டிருக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
13 ஆவது சுற்று வாக்குகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக - 6738
பாமக - 3188
நாம் தமிழர் - 392
மொத்தமாக திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 83431
பாமக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 36241
நாம் தமிழர் வேட்பாளர் 6814
வித்தியாசம் 47190 வாக்குகள் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் அண்ணா அறிவாலயத்தின் முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
விக்கிரவாண்டியில் 63 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்று பிரகாசமான வெற்றி வாய்ப்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தி.மு.க.விற்கு கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆறாவது சுற்று நிலவரம் மொத்த சதவீத ஓட்டுகள்
திமுக - 7413
பாமக - 2271
நாம் தமிழர் 823
மொத்தமாக திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள்- 38,564
பாமக வேட்பாளர் பெற்ற வாக்குகள்- 13,754
நாம் தமிழர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 3098
வித்தியாசம் 24,810 வாக்குகள் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை : 3-வது சுற்று : திமுக முன்னிலை
திமுக 18,057
பாமக 7,323
நா.த.க 1120
வித்தியாசம் 10737
திமுக முன்னிலை
விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 18 ஆயிரத்து 57 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இரண்டாவது சுற்றுகளின் முடிவுகளின் அடிப்படையில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 5 ஆயிரத்து 904 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளின் 2வது சுற்று முடிவுகளின் அடிப்படையில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 849 வாக்குகள் பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்றுகளின் முடிவுகளின்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 12 ஆயிரத்து 2 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 819 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 5 ஆயிரத்து 404 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளின்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 11 ஆயிரத்து 928 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் தி.மு.க. - பா.ம.க.வினர் இடையே தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தபால் வாக்குச் சீட்டில் கூடுதல் மை இருந்ததால் செல்லாது என அதிகாரிகள் அறிவித்ததால் பா.ம.க.வினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா இதுவரை 431 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் 3,096 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விக்கிரவாண்டியில் தற்போது இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 8 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து தி.மு.க. முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போதே பட்டாசுகள் வெடித்து வருகின்றனர்.
8.47 மணி நிலவரப்படி, திமுக 8564 வாக்குகளும், பாமக 3096 வாக்குகளும் , நாதக 431 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
8.40 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 5564 வாக்குகளும், பாமக 2588 வாக்குகளும் நாம் தமிழர் 236 வாக்குகளும் பெற்று உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, தற்போதைய நிலையில் திமுக 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. பாமக வேட்பாளர் அன்புமணியும் கடும் போட்டி. 3-ம் இடத்தில் நாம் தமிழர் கட்சி
தபால் வாக்குகளைத் தொடர்ந்து, 14 மேஜைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக தொடர்ந்து முன்னிலை
தபால் வாக்குகளைத் தொடர்ந்து, 14 மேஜைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக தொடர்ந்து முன்னிலை
தபால் ஓட்டுகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 544 வாக்குகளும், 226 காவல்துறை வாக்குகளும், ஆன்லைன் வாக்குப்பதிவு 28 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 798 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தபால் வாக்குகளில் திமுக முன்னிலை. ஈவிஎம்-களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
தபால் வாக்குகள் எண்ணும் பணி மும்முரம். மொத்தமுள்ள 798 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எண்ணப்பட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைகள் திறக்கப்பட்டன. பனையபுரம் அரசு பள்ளியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு தான், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும், படுகொலை செய்யப்பட்டார். இந்த பிரச்னைகள் தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகின. வாக்கு என்னும் மையமான பனையபுரம் அரசு பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கபட்டு வந்தன.
விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அவை பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. முன்னதாக அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 20 சுற்றுகளாக நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Background
Vikravandi By Election Result 2024 LIVE Updates: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.
விக்கிரவாண்டி இடத்தேர்தல்:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த தொகுதியில் கடந்த தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கை 8 தொடங்கும் நிலையில் முடிவுகளானது, இன்று காலை 11 மணிக்கு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் பணிகள்:
- வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
- தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்குதான், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகளுக்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும்
- வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குகள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்.
மும்முனைப்போட்டி:
இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் இது மும்முனைப்போட்டியாக நிலவுகிறது. அதேநேரம், களத்தில் தற்போது 29 பேர் வேட்பாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, பீகார் ( 1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் ( 2 ), மேற்கு வங்காளம் ( 4) ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -