Vikravandi By-Election LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு
Vikravandi By-Election Polling LIVE Updates: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான கள நிலவரங்களை உடனுக்குடன் கீழே அறியலாம்.
Vikravandi By-Election LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Vikravandi By-Election LIVE: 5 மணி நிலவரம்! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தொறவி வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நிலவரப்படி 64.44 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் 12 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டியில் 11 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணை அவரது முன்னாள் கணவர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 10 மணி நிலவரப்படி 25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாம்பழம்பட்டு வாக்குசாவடி 66-ல் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதாகி இருந்த நிலையில் தற்போது இயந்திரம் பழுதுபார்க்கபட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் உள்ள பனையபுரம் வாக்குச்சாவடியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி வாக்களித்தார்.
விக்கிரவாண்டியில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், மற்ற வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டியில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு மற்றும் காணை ஆகிய 3 வாக்குச்சாவடிகளில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி கானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 126 ஆவது மையத்தில் ஈவிஎம் பெட்டியில் பழுது ஏற்பட்டு கடந்த 20 நிமிடத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு 1350 அரசுப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா காலையிலே வாக்களித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Background
விக்கிரவாண்டியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் தொடங்கியது.
இந்த தேர்தலில் முக்கியமான வேட்பாளர்களாக தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அந்த தொகுதியில் மொத்தம் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்பதிவுக்கு 2 மின்னனு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 552 வாக்கு இயந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், 276 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -