தமிழ் சினிமாவில் தன் கடின உழைப்பாலும், தன்னை புறக்கணித்தவர்கள் மத்தியில் மீண்டு, தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்திருக்கிறார் விஜய். 18 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 


இவரின் ரசிகர்கள் முதலில் விஜய் நற்பணி மன்றமாக ஆரம்பிக்க, நாளையடைவில் தங்களது தளபதியின் அன்பு கட்டளையின் படி, நற்பணி மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்த இயக்கத்திற்கு என விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட தனிக்கொடி, தனி பெயர் உருவாக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர், வார்டு உறுப்பினர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். தொடர்ந்து இந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு கட்ட நற்பணிகள் அவ்வபோது நடைபெற்று வருவது செய்திகளாக வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. 


இந்தநிலையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் இன்று தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் என சமூக வலைத்தளங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பக்கங்கள் உருவாக்கப்பட்டு, அது அனைத்தும் நேரடியாக விஜய்யின் மேற்பார்வையில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


 ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் என்றால் இந்த சமூக வலைத்தள பக்கங்கள் மூலமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தளபதி விஜய் குருதியகம் :


‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற ரத்த தான செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த தானம் செய்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் இதைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தனர். இரத்த தானம் செய்வதை எளிதாக்கவும், தேவைப்படும் பல நோயாளிகளுக்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ள அறிக்கையில், சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்கள், தமிழ்நாடு முழுவதும் இந்த செயலி பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலி அறிமுகம் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ...


தளபதி விஜய் குருதியகம் ப்ளே ஸ்டோர் லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.tvkb.blood


 


 இரத்தம் தேவைப்படுவோருக்கு, இரத்த கொடை தருவோர் முதலில் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து தளபதி விஜய் குருதியகம் செயலியை டவுன்லோடு செய்யவும். பதிவிறக்கம் செய்தபின், முகப்பு பக்கத்தில் DASHBOARD, PROFILE, CHANGE PASSWORD, LOG OUT போன்ற பக்கங்கள் இடம்பெறும். 




அதன்பிறகு, இரத்தம் தேவைப்படுவோர் NEED BLOOD பக்கத்தை க்ளிக் செய்து மொபைல் எண், இரத்தம் தேவைப்படும் நோயாளியின் பெயர், இரத்த வகை, இரத்தம் தேவைப்படும் நாள், தேவைப்படும் இரத்ததின் அளவு, மருத்துவமனையின் பெயர் உள்ளிட்ட இடங்களை பதிவிட வேண்டும். 


இரத்தம் தேவைப்படும்போது OPEN REQUEST, இரத்தம் பெற்றுக்கொண்ட பிறகு CLOSED REQUEST என பதிவிட்டு கொள்ளலாம். 




அதேபோல், இரத்த கொடையாளராக இருக்க நீங்கள் விரும்பினால், DONOR REGISTRATION பக்கத்தை க்ளிக் செய்து தங்களது முழு விவரத்தையும் பதிவிட வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண