விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு பட்ஜெட் 2026

2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியை கைப்பற்றியது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற சூழலில் அவரது தலைமையில் கூட்டணி அமைச்சரவை அமைந்தது. இந்த நிலையில் 2026-2027-ம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இருந்தபோது நிதித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்யப்படது. இதற்காக கடந்த ஜூலை மாதம் முழுவதும் முதல்வர் விஜய் தலைமையில் பல்வேறு துறை வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலதரப்பினருரிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனைகள் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

பட்ஜெட் 2026 - தென் மாவட்ட வளர்ச்சி திட்டம்?

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. குலசேகரப்பட்டினத்தில் அமையும் புதிய விண்வெளி ஏவுதளம் மற்றும் அப்பகுதியில் நடக்கும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது. விண்வெளி ஏவுதள பணிகள் 50% வரை முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் அதற்கு மேலும் கை கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியகுமரி போன்ற தென்மாவட்ட ஊர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது.

விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்

தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் "விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்" அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது, வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையமான (IN-SPACE) இணைந்து விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி உருவாக்கப்படுகிறது. விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. பல்வேறு நேரடி மறைமுக வேலை வாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகலாம் எனவும், பள்ளி கல்லூரி மாணர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் இவை அமைவதாக கூறப்படுகிறது.