தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகிறது. அதற்காக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அண்மை காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு வந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்தில் இசை வெளியீட்டு விழா அல்லது நிகழ்ச்சியில் அரசியல் குறித்த கருத்துக்களை சூசகமாக கூறி வருகிறார். இது போன்ற சூழலில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.  


நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்க உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் “மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக நீலாங்கரையை அடைந்து விடுவார்கள். அனைவருக்கும் நொறுக்குத்தீணி, தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


உற்சாக வரவேற்பு:


இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 234 தொகுதியிலிருந்து வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முறையான அடையாள அட்டை வழங்கப்பட்டு அரங்கில் அமர வைத்துள்ளனர். நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கில் திறண்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.  நடிகர் விஜய் நுழையும் போது அரங்கமே அதிரும் அளவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


கண்களங்கிய  மாஸ்டர்:


 முதலில் மேடையில் ஏரிய நடிகர் விஜய் பின் கீழ் இறங்கி மாற்றுத்திறனாளி மாணவர் அருகில் அமர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டது. அதனை பிரித்து பார்த்த நடிகர் விஜய் மகிழ்ச்சியில் கண்களங்கினார். அதனை தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார்.