மேலும் அறிய

Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!

அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒருவேளை பாஜகவுடன் சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுடன் சேர்ந்து தவெக ஆட்சியமைக்க முயன்றிருக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.,க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். கையோடு தவெகவில் இணைந்தனர். இது தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் இடையே புகைச்சலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார்.

விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டது

இதில் பேசிய அவர் முதலில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற திமுக - விசிக தொண்டர்கள் இடையேயான மோதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதாவது, நடந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டது. விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை கேள்விப்பட்டு அதை தவிர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் தகவலறிந்து அதனை தவிர்த்த நிலையில், அதனை அறியாத தொண்டர்கள் அங்கு கூடினர். இனி இந்த மாதிரி விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கக்கூடாது என தெரிவித்தார். 

தவெக ஆட்சி கவிழ விடமாட்டேன்

தொடர்ந்து அவரிடம், 4 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தவெகவில் இணைந்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, விசிக இதனை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை. இந்த தவெக ஆட்சி அமைய வேண்டும் எனவும், குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து விசிக இந்த முடிவை எடுத்தது. எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையில் 5 ஆண்டுகள் ஆட்சியை திறம்பட தொடர வேண்டும். விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக்கூடாது. 

இதையும் படிங்க: பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!

அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒருவேளை பாஜகவுடன் சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுடன் சேர்ந்து தவெக ஆட்சியமைக்க முயன்றிருக்கும். இதுதான் காங்கிரஸ்,விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவை நாட காரணமாகவும் சொல்லப்பட்டது, 

வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை தவெக உணர்ந்தது. அதனால் தான் அமைச்சரவையில் இடம் பெற வலியுறுத்தியது. அதனை ஏற்றுக்கொண்டு தான் நாங்களும் அமைச்சரவையில் இடம்பெற்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Dindigul power cut (03-06-2026): நாளை திண்டுக்கல்லில் பவர் கட் - மின்சார வாரியம் அவசர அறிவிப்பு
நாளை திண்டுக்கல்லில் பவர் கட் - மின்சார வாரியம் அவசர அறிவிப்பு
Theni power cut: தேனியில் நாளை (03-06-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு விவரம் வெளியீடு
தேனியில் நாளை (03-06-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு விவரம் வெளியீடு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Embed widget