Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையே பிளவு ஏற்பட்டதால் இந்தியா கூட்டணி தொடருமா என்றேல்லாம் கேள்வியெழுந்தது. இதுதொடர்பாக திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

திமுக இல்லாத இந்தியா கூட்டணி என்பது கவலையளிக்கக்கூடிய விஷயம் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் இணைந்தது. தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களைப் பெற்ற நிலையில், காலியாக இருந்த மாநிலங்களவை இடத்தையும் வாங்கிக் கொண்டது. காங்கிரஸின் கட்சியின் செயல்பாடுகளை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இப்படியான நிலையில் மத்தியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை இந்த கூட்டணி சந்தித்த நிலையில் மாநில அளவில் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கும், பிற கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு நிலவி வந்தாலும் பாஜக எதிர்ப்பு விஷயத்தில் அணி திரண்டு நிற்கின்றன.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்டிவனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்! pic.twitter.com/lUm0o5HYjD
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 5, 2026
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையே பிளவு ஏற்பட்டதால் இந்தியா கூட்டணி தொடருமா என்றேல்லாம் கேள்வியெழுந்தது. இதனிடையே ஜூன் 8ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி பங்கேற்பதால் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தெரிவித்து விட்டது. இதனால் கடுப்பான காங்கிரஸ் எம்.பி., தங்கள் கட்சி இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் நிலவும் பிரச்னைகள் பற்றி திருமாவளவன் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மதச்சார்பின்மைக்கான தேசிய அளவிலான இந்தியா கூட்டணி அமைந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி கூட்டம் கூடுகிறது என்பது உள்ளபடியே கவலை அளிக்கக்கூடிய ஒன்று தான். அதற்காக பெரிதும் வருந்துகிறோம். ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது என்று விரும்புகிறோம்” எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Also Read: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்ச ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரியவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
Before You Go
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
ட்ரெண்டிங் செய்திகள்






















