காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உடல் நலம் பெற்று இன்று வீடு திம்ரும்பினார். இருப்பினும் மருத்துவர்கள், திருமாவளவனை ஒய்வு எடுக்க வேண்டும் என அறிவுருத்தியதாக கூறப்படுகிறது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  


மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சாதாரண குளிர் காய்ச்சல் என தெரிவித்தனர்.மேலும், அப்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியானது. மேலும் வரும் 30 ஆம் தேதி வரை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


மருத்தவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம் என தொடர் பயணம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. 


இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் மாதம் 3ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் தரப்பில் நன்கு ஓய்வு எடுக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.