கரூரில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மியாட்டம்

பழமையான கலைகள் அழிந்து வரும் நிலையில் அதனை மீட்டெடுக்கும் விதமாக கொங்கு நாடு கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.

Continues below advertisement

சின்னதாராபுரம் அருகே கொங்கு நாடு கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண உடையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி காண்போர் கண்களுக்கு விருந்தளித்தனர்.

Continues below advertisement

 


 

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்றைய நவ நாகரீக காலத்தில் பழமையான கலைகள் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கொங்குநாடு கலைக்குழுவினரின் ஒரே வண்ணம் உடையில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக அருகில் உள்ள முருகன் ஆலயத்தில் இருந்து முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான பாடல்கள் தொகுக்கப்பட்டு 

 

 


 

சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரே வண்ண உடையில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அரங்கேற்ற விழாவினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.

 

 


 

 

 

 

Continues below advertisement