அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடி பேசியுள்ளார். சிலர் குணத்தை மாற்ற முடியாது; அவர்களைப் பற்றி விமர்சித்து ஆளாக்கிவிட விரும்பவில்லை என்றும் வளர்மதி தெரிவித்துள்ளார்.


பொதுக்குழுவை வரவேற்று பேசிய வளர்மதி. ”வள்ளாலார் ராமலிங்க அடிங்களார் ஒன்று சொல்வார். தூய உள்ளம் படைத்தவனுக்குதான் இறைவன் அருள் கிடைக்கும். வஞ்சகனுக்கு இறைவன் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருப்பார். இதில் சந்தேகமில்லை.


போலவே, எம்.ஜி.ஆர். வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ’மாபெரும் சபைதனில் நீ இருந்தால் உனக்கு மாலைகள் விட வேண்டும்.’


 






அந்த மாலைகளெல்லாம் புகழ் உச்சதிலே நிச்சயமாக கழகத்தை காப்பாற்றக் கூடிய, மக்கள் ஏற்றுக்கொண்ட  ஒரு எளிய தொண்டனாக, உன்னத தலைவனான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு  மாலை விழும் காலம் விரைவில் வரும்.


’மாறாதையா மாறாது
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்..’






இந்த குணங்கள் மாறாது என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-இன் பாடல் இருக்கிறது. 


மாறாத ஜென்மங்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை விமர்ச்சித்து பெரிய ஆளாக மாற்ற விருப்பமில்லை.


கழகத்தை எடப்பாடி பழனிசாமி அவர்கள் காப்பாற்றுவார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். -ரை போல, புரட்சித் தலைவர் அம்மாவைப் போல, எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த இயக்கத்தைக் காப்பார். கழகத்தை காக்க ஒரு உன்னத தலைவர் கிடைத்துவிட்டார்; பிறந்துவிட்டார்.”


இவ்வாறு அவர் பேசினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண