MDMK: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: மதிமுகவுக்கு திமுக ஒதுக்கிய இடங்கள் லிஸ்ட்!

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.

Continues below advertisement

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது. அதில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு

Continues below advertisement

 

 

மாநகராட்சி துணை மேயர்

1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர் 

1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர் 

1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்.

2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.

3. குளித்தலை – கரூர் மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்.

2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்,

3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்.

2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம். 

3. அரச்சலூர் – ஈரோடு மாவட்டம்.

முதல் தலித் சென்னை பெண் மேயர்: யார் இந்த 28 வயது பிரியா ராஜன்?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த சூழலில் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.  இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

 பிரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.

இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola