மேலும் அறிய

இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!

கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து  முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அரசு நிகழ்ச்சிகளில் இனி முதலில் மாநிலப் பாடல்கள் இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வெடித்த சர்ச்சை 

தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி அப்போதைய திமுக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஆனால் அதனை நிராகரித்த அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இடம் பெறும். கடைசியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்தார். இதனால் ஆளுநரோடு மாநில அரசுக்கு கருத்து மோதல் நிலவி வந்தது.  

இதனிடையே தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக பொறுப்பேற்ற நிலையில் முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை தொடர்ந்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் ஆளுநர் மாளிகை மத்திய அரசு விதிமுறைகளை தான் பின்பற்றும் என தவெக அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர்.

அதேசமயம் சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதோடு,  முதல்முறையாக வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை இசைக்கப்பட்டதை தற்போதைய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மனமுவந்து பாராட்டினார். 

பிரதமர் மோடியிடம் விஜய் கோரிக்கை

இதனிடையே கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து  முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனையெல்லாம் பரீசிலித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ம் தேதி அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில்

அதன்படி சில மாநிலங்களில் தேசிய கீதத்துடன் மாநிலப் பாடலும் பாடப்பட்டு இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்துடன் மாநிலப் பாடல் பாடப்படும்போதெல்லாம் தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒன்றாகவே பாடப்பட வேண்டும். முதலில் தேசியப் பாடல் பாடப்பட்டு அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மேலும் ஒருவேளை மாநில பாடல் பாடும் மாநிலங்களில்  முதலில் மாநிலப் பாடல்கள் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..

Embed widget