தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (04.11.2024) திகாலை 10.30 மணிக்கு கொளத்தூர் ஜெகநாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் 'Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ”முதல்வர் படைப்பகம்” ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.


அதேபோல பெரியார் நகர் 4 ஆவது தெருவில் உள்ள பள்ளி மைதானத்தில், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


தொடர்ந்து அவர் பேசியதாவது:


''ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பது நீட் தேர்வு. நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒரு நாள் பணியும். 2019ஆம் ஆண்டு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியைத் தொடங்கினோம். எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்துவோம். 


ஆட்சியில் எதுவும் நடக்கவில்லையா?


ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு திட்டமாகப் பார்த்துப் பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.