மேலும் அறிய

Udhayanidhi Stalin: "ஸ்கூல் பையன் மாதிரி பேசுறீங்க" - உதயநிதியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவெகவை 65 சதவீகித மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று பேசியிருந்த நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர். 

சட்டமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவெகவை 65 சதவீகித மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று பேசியிருந்த நிலையில் அவருக்கு நெட்டிசன்கள்விமர்சித்து வருகின்றனர். 

நம்பிக்கை வாக்கெடுப்பு: 

இன்று தவெக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.  இதில் எதிர்கட்சி தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது பேசினார்கள். அந்த வகையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. பதிவான வாக்குகள் 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார் என்று தெரிவித்து இருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்

இந்த நிலையில் உதயநிதியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து அவர்கள் ஆதேர்தல் அரசியலில் எந்த கட்சி அதிகமான சீட்டுகளை பெறுகிறதோ அது தான் வெற்றி பெற்ற கட்சி. எந்தக் கட்சிக்கு அதிகமான வாக்குகள் விழுகிறதோ அது தான் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சி பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளை போல எதிராக இவ்வளவு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டு திரிகிறார் தேர்தல் அரசியல் என்றால் என்னவென்று உதயநிதிக்கு யாராவது பாடம் எடுங்கள் . கருணாநிதியின் பேரன் இப்படி இருப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று விமர்சித்து இருந்தார்.

மேலும் உதயநிதிக்கு இன்னும் அறிவு முதிர்ச்சியுடன் பேச கருணாநிதியோ ஸ்டாலினோ பழக்கப்படுத்தவில்லை .. வளர்ப்பு சரியில்லை என்றே எடுத்துக்கொள்ளப்படும் .. இன்றும் சிறுபிள்ளையாகவே செயல்படுகிறார் குதிரை பேரம் நடந்து இருந்தால் அதை நிரூபணம் ஆன பிறகே பேசவேண்டும் தவிர அதை உறுதி செய்ய எந்த தகுதியும் இல்லை என்றும் பதிவிட்டுள்ளனர். 

நம்பிக்கை வாக்கெடுப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் முடிவில் தவெக, காங்கிரஸ் மற்றும் ஆதரவுய் கட்சிகள் மட்டுமின்றி, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் பெற்றார். அதன்படி, 144 பேர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 அதிமுக எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லை என வாக்களித்தனர். பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர். திமுக எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget