திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மு.க. ஸ்டாலின் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மின்சார வாகனத்தில் சென்று உடற்பயிற்சி செய்து, பூங்காவின் சுவற்றில் வரையப்பட்டிருந்த போதிமரம் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Continues below advertisement

திருவண்ணாமலையில் மு.க. ஸ்டாலின் பூங்கா

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்பொது தமிழக அரசும் திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றுலாத் தளத்திற்கு உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. அதற்காக புதிய தொழிற்சாலை அமைப்பது, பொழுதுப் போக்கு பூங்கா உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.

திருவண்ணாமலை மாநகராட்சியில் திருக்கோவிலுார் சாலையில் உள்ள எடப்பாளையம் ஏரிக்கரையில் சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் நகரத்தின் பசுமை சுற்றுசூழல் சுற்றுலா கருத்தில் கொண்டு இந்த சிறப்புமிக்க மு.க.ஸ்டாலின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா அமைக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள். ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அமைக்கப்பட்டு உள்ளது.சுற்றுசூழலை கருத்தில்கொண்டு கரைகளை இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க கரைகளை நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது

Continues below advertisement

எடப்பாளையம் ஏரியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் புதியதாக அமைக்கப்பட்ட அதிநவீன வசதி கொண்ட இயற்கை எழில் மிகுந்த மு.க.ஸ்டாலின் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து சுவற்றில் வரையப்பட்டிருந்த போதிமரம் அருகே நின்று புகைப்படம் எடுத்து, மின்சார வாகனத்தில் சென்று பூங்காவை பார்வையிட்ட அவர் உடற்பயிற்சி செய்தார்.

அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை

சுற்றுசூழலை கருத்தில் கொண்டு கரைகளை இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க கரைகளை நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது, இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை 2.00 கி.மீ. (Reflexology method) துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக இடம் ஒதுக்கி உபகரணங்கள் அமைக்கப்பட்டு, அனைவரும் அனுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள் பெண்கள் இருவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையில் மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையை சுற்றி இயற்கை கொஞ்சும் எழிலோடு பல்வகை வகையான நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளது, ஏரிக்கரையை சுற்றி நவீனமுறையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது ஓய்வெடுக்க அங்காங்கே நவீன நிழற்குடைகளும் அமைக்கபட்டு, நடைபாதை முழுவதும் மெல்லிய இசையுடன் (Music Therapy) மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையை சுற்றி பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டு, ஏரியை துார்வாரப்பட்டு நிலத்தடி நீர் உயரும் வண்ணம் மற்றும் மழைநீரும் சேகரிக்கும் அமைப்பாகவும் மற்றும் தடையற்ற உட்கட்டமைப்புடன் கூடிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த  பூங்காவிற்கு வரும் மக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளி பயன்படுத்தும் வகையிலும் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழ்நாடு பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.