இரவில் சீறிய பைக்குகள்.. பைக் ரேஸில் இறந்த இரண்டு சிறுவர்கள் ; சோகத்தில் மூழ்கிய கிராமம்

பொழுதுபோக்கிற்காக இரவு நேரங்களில் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது.

Continues below advertisement

பொழுதுபோக்கிற்காக இரவு நேரங்களில் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது. பணம் வைத்து விளையாடும் அளவிற்கு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.

Continues below advertisement

இது சில சமயங்களில் உயிரை பறிக்கும் வகையில் ஆபத்தை விளைவித்து விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைகிறது. சென்னை ஈசிஆர் மட்டுமன்றி கிராமப்புற சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வாகன பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக சைலோம் சென்று அங்கிருந்து ஆவியூர், வடக்கு நெமிலி, ஆவி. கொளப்பாக்கம் கூட்ரோடு வழியாக மீண்டும் 5 முனை சந்திப்பை வந்தடையும் வகையில் வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வாகன ரேஸின்போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில், வாகனத்தில் பயணம் செய்த மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, திருக்கோவிலூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, திருக்கோவிலூர் புறவழிச்சாலை பகுதிகளில் இது போன்ற இருசக்கர வாகன பந்தயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பைக் ரேஸில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள்: 

அதிக வேகத்தில் பைக் ஓட்டுவதால் விபத்து ஏற்படலாம்.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிடுவார்கள்.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், அதிவேக பயணங்களை மேற்கொள்கின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் விபத்துகளால், பின்னால் இருப்பவர்கள், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்கள் உயிரிழக்கலாம்.

Continues below advertisement