பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று. 1967ல் தமிழக அரசியலில் திராவிடம் மலரக் காரணமாக இருந்தவர். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டு வந்தது. 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழத்திலிருந்து விலகிய அண்ணா திமுகவை தொடங்கினார். தனித் தமிழகம் என்ற பெரியாரின் முன்னெடுப்பே அண்ணா திமுகவைத் தோற்றுவிக்க தனிப்பெருங் காரணமாக இருந்தது என்பது வரலாறு. இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி அவர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.