மேலும் அறிய

தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை

அரசு வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி - தவெக பெண் நிர்வாகி மிரட்டலால் முதியவர் தற்கொலை

"அடுக்குமாடி வாங்கி தருகிறேன்" என ஆசை வார்த்தை

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் ( வயது 73 ) இவருடைய மனைவி தங்கமணி இவர்களது இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் தற்போது வேலை வாய்ப்பின்றி தவித்து வந்துள்ளனர். இதனால் விஸ்வநாதன் டி.பி. சத்திரத்தில் இருந்த தனது சொந்த வீட்டை விற்பனை செய்து விட்டு மனைவியின் அண்ணன் வீட்டின் அருகே குடியேறியுள்ளார்.

இதை அறிந்த விஸ்வநாதனின் மனைவியின் அண்ணன் மகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளருமான கலைவாணி, விஸ்வநாதனிடம் "தவெக மாவட்ட செயலாளர், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் தென்னரசு தனக்கு மிகவும் நெருக்கமானவர்.

எனவே உங்களுக்கு அவரிடம் சொல்லி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சாலமங்கலத்தில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அரசு கட்டியுள்ள அடுக்கு மாடி வீடு வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.7 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

சொன்ன படி வீடு வாங்கித் தராமல் வெகு நாட்களாக இழுத்தடித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி விஸ்வநாதன் தம்பதியினர் அதே ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து அங்கு குடியேறியுள்ளனர். இந்தச் சூழலில் விஸ்வநாதன் வீட்டிற்கு வந்த கலைவாணி, அவரது ஏ.டி.எம் கார்டையும் திருடிச் சென்றுள்ளார். மேலும் அதிலிருந்து ரகசியமாக மேலும் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி , விஸ்வநாதன் காஞ்சிபுரத்தில் வாங்கி வைத்திருந்த இடத்தின் அசல் ஆவணங்களையும் ஏமாற்றி வாங்கி வைத்துக் கொண்டு, அதை அவரிடம் திருப்பித் தரவும் மறுத்து வந்துள்ளார். பணத்தையும் இழந்து, நிலத்தின் ஆவணங்களையும் பறிகொடுத்து நிர்கதியாய் நின்ற விஸ்வநாதன், பொறுமை இழந்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

" பணம் வாங்கவே இல்லை "

தவெக மாவட்ட செயலாளர் அமைச்சர் தென்னரசு பெயரைக் கூறிக் கொண்டு அரசியல் பலத்தோடு காவல் நிலையம் வந்த தவெக நிர்வாகி கலைவாணி , "நான் 7 லட்சம் ரூபாய் வாங்கவே இல்லை, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது ? என்று கூறி பணத்தைத் தர முடியாது என கறாராக மறுத்துள்ளார். காவல் துறையினரும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று தவெக பெண் நிர்வாகிக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையம் சென்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்ற வேதனையுடனும், மன உளைச்சலுடனும் விஸ்வநாதன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், மிகுந்த மனவேதனையுடன் தனது மனைவி மற்றும் மகன்களிடம், "நான் எப்படியாவது அந்தப் பணத்தை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்" என்று கூறிவிட்டு, திடீரென எலி மருந்தை குடித்துள்ளார்.

அவர் மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சுமார் 45 நிமிடங்கள் உயிருடன் போராடிய முதியவர் விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர் உயிரிழந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, படப்பை காவல் துறையினர் தவெக நிர்வாகி கலைவாணியிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, விஸ்வநாதனின் இறுதிச் சடங்கு செலவிற்காக கலைவாணியிடமிருந்து வெறும் 1 லட்சம் ரூபாயை மட்டும் போலீசாரே வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகாரை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி புகாரின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யவில்லை, என்றும் பணம் ஏழு லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்து விடுகிறோம், பணம் கொடுக்கவில்லை என்றால் தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் தென்னரசுவின் பெயரைக் கூறி ஏழை முதியவரின் தற்கொலைக்குக் காரணமான தவெக மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட படப்பை காவல்துறையினர் மீது அரசு உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget