Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
கொளத்தூரில் திமுக கூட்டத்தில் கண்ணீர் வடித்த நடிகர் சத்யராஜை தவெக-வினர் கேலி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் தாக்கம் தற்போது வரை இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. குறிப்பாக, அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
சத்யராஜ் கண்ணீர்:
மு.க.ஸ்டாலினின் தோல்வி திமுக-வினருக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலினின் தோல்வியை ஏற்க முடியாத முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற பல திமுக நிர்வாகிகளும் கொளத்தூர் தொகுதி மக்களை மிக கடுமையாக விமர்சித்தனர்.
இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் இன்று திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அவர் அப்போது, தனது பேச்சைத் தொடங்கும் முன்பு கொளத்தூரில் என்னுடைய முதல் கேள்வி நியாயமா..? நீங்கள் செய்தது நியாயமா? என்று அழுகையை கட்டுப்படுத்தி பேசினார்.
கேலி செய்யும் தவெக:
அய்யய்ய இந்த அங்கிள் அழுகுறாரு மா....🤣🤣🤣 pic.twitter.com/xOQEVZcMiA
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) Jgune 5, 2026
அப்போது தனது கண்ணீரை அவர் கட்டுப்படுத்தினாலும் கொளத்தூர் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் தோல்விக்காக இப்படி பேசினார். பின்னர், தற்போதைய ஆட்சி மற்றும் திமுக குறித்து பேசினார். சத்யராஜ் அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக-வினர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து சத்யராஜுற்கு ஆதரவாக கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Enna kattappa uncle azhuvuraru 😂😂 pic.twitter.com/JAIuNSd8p1
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) June 5, 2026
சத்யராஜுன் வீடியோவைப் பகிர்ந்த தவெக ஆதரவாளர்கள் கட்டப்பா அழுகுறாரு.. இந்த அங்கிள் அழுகுறாரு என்று சத்யராஜை கேலி செய்து வருகின்றனர். தற்போது இணையத்தில் சத்யராஜுன் அழுகை வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக - தவெக:
சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர். விஜய் திமுக-வை எதிர்த்து தனது அரசியலைத் தொடங்கியது முதலே அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும், அவரது மகள் திவ்யா சத்யராஜும் தீவிர திமுக ஆதரவாளர்களாக இருந்தபோதும், சத்யராஜுன் மகனும், நடிகருமான சிபி சத்யராஜ் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் தவெக-விற்கு ஆதரவாக தொடர்ந்து தனது கருத்துக்களை பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















