மேலும் அறிய

"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பொங்கி எழுந்த தவெக விஜய்!

மத்திய பாஐக அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத, பிளவுவாத அரசியலானது இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலின்றி வேறென்ன? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஐக அரசின் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், "ஜனநாயகத்திற்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும்

தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?

*மத்திய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம், இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள் வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது.

வக்பு வாரியச் சட்டம் என்பது, முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பு. வக்பு வாரியச் சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?

இஸ்லாமியர்கள் மீதான உளவியல் தாக்குதல்!

மத்திய பா.ஐ.க. அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலின்றி வேறென்ன? 

கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு, எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள், மக்களின் தன்னெழுச்சி மூலம் எதிர்கொண்ட விளைவுகளை வரலாறு முழுக்க நாம் பார்த்திருக்கிறோம்.

'இஸ்லாமியச் சிறுபான்மையினரின் நலன் காக்கவே இச்சட்டத் திருத்தம், எதிர்க்கட்சியினர் தவறாகத் திசைதிருப்புகிறார்கள்" என்ற வெற்று வாதத்தை மத்திய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர். மத்திய பாஜக அரசு சொல்வது போல, இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக் கூட அவர்களிடம் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை?

ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்? இதுதான். இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல். இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஜனநாயகச் சக்திகளும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன. ஒருமித்த குரலில் ஒன்றிய அரசின் செயலைக் கண்டிக்கின்றன.

இந்த மசோதா பற்றிப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கத்திற்கு மாறாக, இணக்கமான பரிந்துரைகளை மறுத்தது என்று அக்கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களே குற்றம் சாட்டி உள்ளனர். இது பா.ஐ.க. அரசின் கொடுங்கோல் அதிகாரமன்றி வேறென்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தனது பொதுக் குழுவில் அதே கருத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக விழுமியங்களையும் மறுத்து, தனது பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் துணையோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுத்துள்ள மத்திய பாஜக அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் வன்மையான கண்டனங்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் குரல்களுக்கும் செவிமடுக்கும் விதமாக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

மத்திய பா.ஐ.க அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்" என குறிப்பிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget