மேலும் அறிய

"எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் நான் டாக்டர் தான்.."அரசு மருத்துவமனையில் தவெக எம்.எல்,ஏ அதிரடி ஆய்வு!

மிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் முதன்முறையாகத் தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் முதன்முறையாகத் தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

நோயாளிகளுடன் கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை விவரங்கள்

மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தி மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் சிகிச்சையின் தரம் மற்றும் மருத்துவமனை வசதிகள் குறித்துக் கேட்டறிந்த அவர் அவர்களின் குறைகளையும் பதிவு செய்து கொண்டார்.

மாதத்தில் ஒரு நாள் முழுநேர சேவை வாக்குறுதி

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழக முதல்வர் அறிவுறுத்தியபடி மக்களோடு மக்களாக இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்தார். தானும் ஒரு மருத்துவர் என்பதால் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இதே மருத்துவமனையில் தங்கியிருந்து சேவை செய்யப் போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே தனது நோக்கம் என்றும் அவர் உறுதியளித்தார்.

மருத்துவமனை மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகள்

மருத்துவமனையில் நிலவும் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டிய அவர் சில பிரிவுகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததைக் கண்டறிந்துள்ளதாகவும் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மருத்துவமனைக்குத் தேவையான புதிய மருத்துவ உபகரணங்களை வாங்கவும் இங்கு வரும் நோயாளிகளைச் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்காமல் இங்கேயே தரமான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள 100 மாணவர் சேர்க்கையை 150 ஆக உயர்த்தத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விளக்கம்

தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் மற்றும் பட்டா போன்ற கோரிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார். அதேவேளையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொண்டர்களுடன் சென்றது குறித்து எழுந்த கேள்விக்கு அங்கு ஒரே ஒரு நோயாளி மட்டுமே இருந்ததாகவும் அதிக அளவில் தொண்டர்கள் வரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். மருத்துவப் பணிகளில் தான் தலையிடப் போவதில்லை என்றும் நிர்வாக ரீதியிலான மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Cuddalore power cut: கடலூர் மக்களே உஷார்: 9-ம் தேதி மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூர் மக்களே உஷார்: 9-ம் தேதி மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
3 மாதங்களில் ரூ.89 அதிகரிப்பு: கேஸ் விலை உயர்வுக்கு பா.ம.க. தலைவர் கண்டனம்!
3 மாதங்களில் ரூ.89 அதிகரிப்பு: கேஸ் விலை உயர்வுக்கு பா.ம.க. தலைவர் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Fortuner Rival: பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!
பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!
Tamilnadu Round Up: டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
Vck Sangathamilan : சங்கத்தமிழனை கட்சியில் இருந்து தூக்கிப்போட்ட விசிக.! திருமாவளவன் சொன்ன 10 காரணங்கள்- என்ன தெரியுமா.?
சங்கத்தமிழனை கட்சியில் இருந்து தூக்கிப்போட்ட விசிக.! திருமாவளவன் சொன்ன 10 காரணங்கள்- என்ன தெரியுமா.?
Embed widget