Royapuram MLA: காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து தகராறு செய்தாரா தவெக எம்எல்ஏ? உண்மையில் நடந்தது என்ன?
ராயபுரம் எம்எல்ஏ தவெக-வைச் சேர்ந்தவரான விஜய் தாமு காவல் நிலையத்தின் உள்ளே புகுந்த காவல் ஆய்வாளரை மிரட்டினாரா? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

ராயபுரம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியை ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு காவல் நிலையத்தின் உள்ளே சென்று மிரட்டியதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? அவர் காவல் ஆய்வாளரை மிரட்டினாரா? என்ற விவரத்தை கீழே காணலாம்.
நடந்தது என்ன?
ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சையத் இப்ராஹிம் என்ற இளைஞருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. அப்போது, திருமண மண்டபத்திற்கு வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மணமகன் சையத் இப்ராஹிமும் தானும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீரென மண்டபத்தின் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கே தகவல் அறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி காவல்துறையினருடன் வந்தார். அப்போது, அவர் போராட்டக்காரர்களை சமாதானம் செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர். அப்போது, காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி அந்த பெண்ணுடன் வந்த உறவினர் ஒருவரை தாக்கியுள்ளார்.
தகராறு செய்தாரா ராயபுரம் எம்எல்ஏ:
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராயபுரம் எம்எல்ஏ விஜய்தாமு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து ராயபுரம் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியிடம் தாங்கள் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறையின் கீழ் பணியாற்றுவதால் எந்த தவறாக இருந்தாலும் அவரையே சாரும் என்று தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்காமல் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், காவல் ஆய்வாளர் பணம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் உரிய ஆதாரம் இருந்தும், அவர்கள் முன்பே காவல்துறையினரிடம் புகார் அளித்தும் ஏன் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விரைவில் நடவடிக்கை:
அந்த பெண்ணிடம் உரிய ஆதாரம் இருந்தும், அவர்கள் முன்பே காவல்துறையினரிடம் புகார் அளித்தும் ஏன் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், காவல் ஆய்வாளர் போராட்டத்தின்போது அந்த பெண்ணுக்கு ஆதரவாக வந்த பெண்களை தரக்குறைவாகவும், ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விரைவில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















