நெகட்டிவ் விமர்சனம் தான் என்னை மேலும் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை உண்டாக்குவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் ஏராளமான இளம் அமைச்சர்கள் உள்ளனர். அதில் முக்கியமானவர் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கும் இவர் மிகப்பெரிய அளவில் சமூக ஊடகங்களில் கேலிப்பேச்சுக்கும் உள்ளாகியுள்ளார். தொழில் முதலீடுகள் குறித்து இவர் கோட் அணிந்து பேசிய வீடியோ கடுமையாக கேலி செய்யப்பட்டது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கீர்த்தனா தொடர்ந்து தன்னுடைய பணிகள் கவனம் செலுத்தி வருகிறார். 

இதனிடையே தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதாவது, “நானும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் இருந்து படித்து வந்தவள் தான். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்த முதலமைச்சர் விஜய் அண்ணாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு தான் எல்லா பெருமையும் சேரும். அமைச்சராக பொறுப்பேற்கும்போது எனக்கான பொறுப்புணர்வுகள் தான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஊழல் இருக்கக்கூடாது என தேர்தல் முடிந்ததும் உடனடி மாற்றம் வேண்டும் என விரும்பிய மக்களுக்காக அவர்களுக்காக ஓடிக் கொண்டேயிருக்கிறோம். 

Continues below advertisement

நாங்கள் தேர்தலில் ஜெயித்த பிறகு ஒரு கொண்டாட்டம் கூட நடத்தவில்லை. நான் வீட்டிற்கு சென்று எங்க அப்பா, அம்மாவுடன் பெரிதாக நேரம் செலவிடவில்லை. சிவகாசி, சென்னை என ஓடிக்கொண்டே இருக்கிறோம். மக்களாகிய நாம் மாற்றத்திற்காக நிறைய விஷயங்களை பற்றி நினைப்போம். அந்த அதிகாரத்தை நம்மை கையில் கொடுக்கும்போது அழகாக மாற்றுவோம்.  இது இந்தியாவிலேயே மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

தவெக ஆளும்கட்சியாக இருக்கும்போது எதிர்கொள்ள்ளும் பிரச்னைகள் வேறு மாதிரியாக உள்ளது. ஒரு பெண்ணாக நான் நான் கேலிசெய்யப்படுகிறேன். என் மீதான விமர்சனம் நன்றாக இருந்தால் அதை மாற்றிக் கொள்வேன். மற்றவைகளை கண்டுக்கொள்ள மாட்டேன். நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், அதை நான் செயல்படுத்தி என்னை நான் நிரூபிப்பேன். மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக தான் வந்தோம். அந்த நெகட்டிவ் விமர்சனம் தான் என்னை வளர்க்கிறது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

Also Read: TVK Minister Keerthana: அன்று மு.க.ஸ்டாலினிடம் வேலை.. இன்று தவெக அமைச்சர்.. கீர்த்தனாவின் கதை தெரியுமா?

தொடர்ந்து கீர்த்தனா கோட் அணிந்து பேசிய வீடியோ ட்ரோல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வார்த்தை அரசியலையும் தாண்டி, உடை அரசியலுக்கு சென்று விட்டார்கள். அந்தளவுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ என தோன்றுகிறது. மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். இப்படி பேசுவதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். இதெல்லாம் பார்க்கும்போது ஏன் நாங்க எல்லாம் கோட் போடக்கூடாதா? என்று தான் விஜய் கேட்டதை தான் இங்கு கேட்க தோன்றுகிறது.