தவெக  கட்சியின் 2ஆவது மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரேம்ப் வாக் சென்ற விஜய் தொண்டர்களை பார்த்து உற்சாகப்படுத்தினார். அப்போது தொண்டர் ஒருவர் திடீரென விஜய்யின் கால்களை பிடித்துக்கொண்டு விடமறுத்தார். அப்போது பவுன்சர்கள் அவரை விலக்கி விட்டனர். பின்னர் கட்சி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தவெக கட்சியின் கொடியை விஜய் ஏற்றி வைத்தார். 

இதற்கு முன்னதாக தவெக தலைவர் விஜய் ராம்ப் வாக்கின் போது தொண்டர்கள் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவெக மதுரை மாநாடு என்ற ஹேஷ்டாக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. இதில், மதுரை மாநாடு செல்ஃபியும் டிரெண்டிங்காகி வருவது குறிப்பிடத்தக்கது. 

மாநாட்டின் தாெடக்க உரையாக பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தார். இக்கூட்டத்தில் பேசிய அவர், வருங்கால முதல்வர், தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி தொண்டர்களே நாம் இன்னும் நெடிய தூர பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. வேர்வையில் குளிக்க வேண்டும், மக்களின் அன்பை பெற வேண்டும். அப்போது மக்களின் வாக்குகளை வெல்ல முடியும். மதுரை மாநாடு மாபெரும் வெற்றி பெற்று விட்டது என்றும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய மதுரை மண்ணை சேர்ந்த தேன்மொழி பிரசன்னா பேசியதாவது, விஜய் என்றால் எழுச்சி, விஜய் என்றால் இளைஞர்களின் நம்பிக்கை. இது மற்றவர்களை போல கொள்ளை கூட்டம் அல்லை, கொள்கை கூட்டம் என்றும் பேசியுள்ளார்.