காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊத்துவேன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ். கொடிக்குளம் பேரூராட்சியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் ( வயது 30 ). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு ஒரு தலைபட்சமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் சிறுமி அருகே உள்ள கடைகளுக்கு சென்று வரும் போதெல்லாம் ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும், தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

Continues below advertisement

இந்த தொடர் மிரட்டல் மற்றும் பின் தொடர்ந்து வருவது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் சிறுமி. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஜோசப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர் கூமாபட்டி காவல் துறையினரை அணுகிய போது புகார் எடுக்க தாமதப்படுத்தியதாகவும் பின்னர் மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டு அலைக் கழித்ததாகவும் தெரிவித்துள்னர். வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த தவெக நிர்வாகி ஜோசப் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த செய்தியை காவல் துறையினர் மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement