''தவெக ஆச்சரியக்குறிகளே! அதிமுகவ சீண்டி சீப் பப்ளிசிட்டியா- ரீல்ஸ் போட்டு விளாடுங்க'' அடிக்கும் அதிமுக!
TVK Vs AIADMK: தவெக ஆச்சரியக் குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா?

அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உக்கார்ந்திருக்கும் அதிமுகவை சீண்டிப் பார்த்து Cheap Publicity தேட வேண்டாம் என்று அக்கட்சியின் ஐ.டி. விங் சாடி உள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:
’’தவெக ஆச்சரியக் குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா?
தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!
தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்?
இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா?
இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ?
குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்!
தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம்தான்..
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.
கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க.
அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க.
ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு.
இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது.
போங்க போங்க ..போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..’’
இவ்வாறு அதிமுக ஐ.டி. விங் தெரிவித்துள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















