TVK: 13ம் தேதி வரை டைம்! விஜய் ஆட்சிக்கு நாள் குறித்த ஆளுநர்! சட்டசபையில் வெல்லுமா தவெக?
விஜய் நாளை முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள சூழலில், தவெக வரும் 13ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கடந்த நான்கு நாட்களாக பெரும்பான்மை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தது. இந்த சூழலில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆதரவு கிடைத்த நிலையில், விசிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று ஆதரவு அளித்தது. அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
120 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்கிறார். இந்த சூழலில், விஜய் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 13ம் தேதி அல்லது அதற்கு முன்பு நடைபெற உள்ளது.
தனிப்பெரும்பான்மை:
இந்த வாக்கெடுப்பில் விஜய் தனது தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வரும் புதன்கிழமை விஜய் தனது சட்டமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் 5 எம்எல்ஏ-க்களுடனும், திமுக கூட்டணியிலே தொடர்ந்தாலும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தங்களது தலா 2 எம்எல்ஏ-க்களின் ஆதரவை தவெக ஆட்சியமைய அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், வரும் புதன்கிழமை விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சவாலும் அவருக்கு இருக்காது என்று கருதப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலே எதிர்கொண்ட முதல் தேர்தலிலே ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு எம்ஜிஆருக்கு பிறகு விஜய்க்கு அமைந்துள்ளது. ஆனாலும், அவர் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனது பிரதான எதிர்க்கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது அவருக்கு சாதகமா அமையுமா? அல்லது பாதகமா அமையுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு:
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் அங்கம் வகித்து வந்த அதிமுக இந்த முறை 3வது இடத்தில் சட்டமன்றத்தின் உள்ளே செல்கிறது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், திமுக சட்டமன்ற தலைவராக யார் செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினே திமுக-வின் சட்டமன்ற தலைவராக செயல்படுவார் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் அரசியல் களத்திலே தேர்வாகியிருக்கும் விஜய் எப்படி ஆட்சி நிர்வாகம் நடத்தப்போகிறார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















