பொங்கல் கொண்டாட்டம்- தமிழக அரசின் பரிசு

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பானது தமிழக மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, பச்சரிசி, சக்கரை, வேட்டி,சேலை மற்றும் முழு கரும்பானது வழங்கப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சி காலத்தில் ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் தரம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

பொங்கலுக்கு வேட்டி, சேலை

அடுத்தாக 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 3ஆயிரம் பணம் மற்றும் பச்சரிசி, சக்கரை, வேட்டி, சேலை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. இந்ந நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தவெக அரசு பொங்கல் பரிசாக கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடருமா.? அல்லது நிறுத்தப்படுமா.? என கேள்வி எழுந்தது.  இந்த நிலையில் தவெக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடரவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வேட்டி சேலைக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

அந்த வகையில், 2027ம் ஆண்டு பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நூல் கொள்முதல் செய்து வேட்டி, சேலை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படும். அந்த வகையில்,  2027ம் ஆண்டு பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 642 கோடி நிதி ஒதுக்கீடு செய்யகோரிய நிலையில், முன்பனமாக 300 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. 

2.27 கோடி சேலை- 2.25 கோடி சேலைகள்

இதன்படி, 2027 பொங்கலுக்கு, 2.27 கோடி சேலைகள், 2.25 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கூட்றவு துறையின் கீழ் இயங்கும் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் மூலம் இவைகள் தயாரிக்கப்பட உள்ளது. இதன்படி, நூல் கொள்முதல், உற்பத்தி முன்பணம் வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.