மேலும் அறிய

போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்

TVK Police Station Reels : அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு இடங்களில் தவெகவினர் ஆலோசனை வழங்குவது போல ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில், காவல் நிலையத்தில் போலீசாருடன் பேசுவதை தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸாக வெளியிட்டிருப்பது பொதுமக்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தவெகவினரின் ரீல்ஸ் மோகம்

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து தவெகவினர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்வது,  உணவுக்கூடங்களில் சாப்பாடு தரமாக இருக்கிறதா என பரிசோதிப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தவெக சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், எம்எல்ஏ நாற்காழியில் அமர்ந்து தவெகவினர் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வந்தனர்.

அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய தவெகவினர்

அடுத்தாக மாநகராட்சி அலுவலங்களுக்கு சென்ற தவெக நிர்வாகிகள் அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது போன்று  வீடியோவாக பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தவெகவினர், போலீசாருடன் அமர்ந்து பேசுவது போல வீடியோ எடுத்து அதனை விஜய் படதான தெறி படத்தில் வரும் மியூசிக் போட்டு ரீல்ஸாக வெளியிட்டிருப்பது பொதுமக்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

காவல் நிலையத்தில் ரீல்ஸ்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்கள் தடுக்கும் நோக்கில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொங்கலூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தவெக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்  ராம்குமார்,மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அங்கு வந்த தவெக கட்சியினர் காவல்நிலையத்திற்குள்ளே தவெக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் போலீசாருடன் அமர்ந்து உரையாடுவது போல் வீடியோ எடுத்து அதனை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தவிக்கும் போலீஸார்

இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக காவல் நிலையத்திற்குள் சென்று தவெக கட்சியினர் அத்துமீறி வீடியோ பதிவை செய்வதை எப்படி தடுப்பது, என்ன செய்வது என தெரியாமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர். இதுபோல சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதே சமயத்தில் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு, சிபிசிஐடி விசாரணை: தவெக அரசிடம் அதிமுக சரமாரிக் கேள்வி!
மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு, சிபிசிஐடி விசாரணை: தவெக அரசிடம் அதிமுக சரமாரிக் கேள்வி!
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget