சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, திமுக ஆட்சியின் சாதனை என்பது மக்களை ஏமாற்றுவதும், மக்களுக்கு துரோகம் செய்வதுதான் என்றார். திமுக ஆட்சி 2026ஆம் ஆண்டு மிகப்பெரிய வீழ்ச்சியடையும் என்பது உறுதி. திமுக ஆட்சி உறுதியாக 2026 ஆம் ஆண்டு வீழ்த்தப்படும் எனவும் கூறினார்.


மேலும், சவுக்கு சங்கர் காவல்துறையை பற்றி பேசி கருத்துகளில் உடன்பாடு இல்லை. அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிறைச்சாலையில் சவுக்கு சங்கர் தவறாக நடக்கப்பட்டு அடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் உண்மையிலே வருத்தம் அளிக்கிறது. சிறைவாசிகளுக்கு கொடுமையில் நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். மேலும் சவுக்கு சங்கர் எடப்பாடிக்கு ஆதரவாக மாறி உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி சவுக்கு சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.எடப்பாடி என்ற துரோக சிந்தனை உள்ள மனிதனை ஆதரிப்பதால் சவுக்குசங்கர் இந்தநிலைக்கு ஆளாவதாக நினைக்கிறேன் என்றார்.



திமுக வந்தால் மின்வெட்டு வந்துவிடும் என்று அனைவருக்கும் தெரியும். திமுக வந்தால் திமுகவின் அராஜகம் பட்டிதொட்டி எல்லாம் பரவிவிடும், மின்வெட்டு காரணமாக திமுக ஆட்சி கருணாநிதி காலத்தில் பறிபோய் உள்ளது; அவ்வாறு இருந்தும் திருந்தமாட்டார்கள். மின்வெட்டிற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்கள் வாக்களித்ததன் காரணமாக பேய்க்கு பதிலாக. பிசாசு கொண்டு வந்த கதையாக திமுக ஆட்சி நடைபெறுவதாக மக்கள் தமிழ்நாடு முழுவதும் வருத்தப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்.மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக 2026 ஆம் ஆண்டு திமுகவை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கள்ளர் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வித்துறையில் இணைக்கப்படுவது அவசியமல்ல, இதையெல்லாம் கண்டித்து வருகிறோம் என்றார். தமிழக மக்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எதிரான ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.