மேலும் அறிய

TTV Dhinakaran: தவெக-வினர் அராஜகம்? - முதல்வர் விஜய் ஆக்ஷன் எடுக்காதது ஏன்? - தினகரனின் நியாயமான கேள்வி

அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறுகின்றனர். தவெகவினர் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சி என்ற மமதையில்  தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்"  என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

மேலும், ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அதிரடிப்படை எங்கே? - முதல்வர் விஜய் அறிவித்த திட்டத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட டிடிவி தினகரன்

ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.

எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான  ஜோசப் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt White Paper: “தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
“தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
C. Vijayabaskar Quits ADMK: “கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
“கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
Singappen Task Force: ‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்
‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt White Paper: “தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
“தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
Singappen Task Force: ‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்
‘குட் டெச் அல்ல, பேட் டெச் அல்ல, இனி டோன்ட் டெச்’ - கர்ஜித்த சிங்கப்பெண் படை.. வீறு கொண்டு எழுந்த பெண்கள்
C. Vijayabaskar Quits ADMK: “கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
“கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
Trump Warns Netanyahu: “கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோ“: நெதன்யாகுவை வெளுத்துவிட்ட ட்ரம்ப்; லெபனான் விவகாரத்தில் அட்வைஸ்
“கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோ“: நெதன்யாகுவை வெளுத்துவிட்ட ட்ரம்ப்; லெபனான் விவகாரத்தில் அட்வைஸ்
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
Embed widget