மேலும் அறிய

CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!

விஜயை நம்பி வந்த சிலர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காருக்கு பாதுகாப்புக்கு நின்ற கேவலத்தை பதவி ஆசையில் விஜயபாஸ்கர்கள் ஏற்கலாம், அவர்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் ஏற்கிறார்களா என அமமுக விமர்சித்துள்ளது.

திமுகவுடன் கூட்டணி சேர அதிமுக முயற்சி செய்தது என்பது திட்டமிட்ட பொய் என்றும், விரைவில் தவெகவின் சிறுமை புத்தி அம்பலமாகும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. 

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமமுக ஐடி விங், “உசிலம்பட்டியில் நிர்மல்குமாரின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இது அவருக்கு எத்தனையாவது கட்சி  எனக்கேட்டால் அவர்களே அது கணக்கில்லை தம்பி"  என்றே சொல்வார்கள்.  சாட் ஜிபிடியிடம், ஒருவேளை தவெக ஆட்சிக்கு வரவில்லையென்றால், நிர்மல்குமார் எந்த கட்சியில் சேர்ந்திருப்பார் எனக்கேட்டால், மன்னிக்கவும் என்னால் கணிக்க முடியவில்லை என அதுவும் குழம்பித்தான் போகும்.  

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்கிற கோயல்ஸ் சித்தாந்தத்தை உள்வாங்கி இருக்கும் தவெக, அவர்களின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக கோயபல்சையும் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள். திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்ததால் தான் அதிமுக எம்எல்ஏக்கள், தவெக பக்கம் வருகிறார்கள் என நிர்மல்குமார் சொல்லி இருக்கிறார்?

அதுதான் உண்மையெனில், தவெகவுக்கு சட்டமன்றத்தில்  ஆதரவளித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள், தங்களின் செயலுக்கு வருந்தி, கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தது ஏன் என்பதை நிர்மல்குமார் மக்களுக்கு புரிய வைப்பாரா? ஆக திமுகவுடன் கூட்டணி சேர அதிமுக முயற்சி செய்தது என்பது திட்டமிட்ட பொய் என்பதும், தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களின் கோபத்தை மடைமாற்ற செய்த சப்பைக்கட்டு என்பதும் புரிகிறது.

தவெகவின் சிறுமை புத்தி அம்பலமாகும்

 அதிமுகவுக்கு திரும்பிய சில எம்எல்ஏக்கள், தங்கள்  மீதான தொகுதி மக்களின் கோபத்தை சமாளிக்க முடியாமலும், கட்சி நிர்வாகிகளின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமலும், வந்தவரை லாபம் என  பேரம் பேசி விலைப்போனவர்களை தங்கள் பக்கம் இழுத்து, ஏதோ அதிமுகவையும் அமமுகவையும் மொத்தமாக தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாக பகல்கனவு காணும் தவெகவின் சிறுமைபுத்தி விரைவில் அம்பலம் ஏறும் என்பதை நிர்மல்குமார்கள் புரிந்து கொள்வது நல்லது. 

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றிப்பெற செய்த அந்தந்த தொகுதி மக்கள், அந்த எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிக்க வேண்டும் என்றா வெற்றி பெற வைத்தார்கள்? 5 ஆண்டுகள் தங்களின் தொகுதிக்கான நலத்திட்டங்களை செய்வதற்கு தானே வாக்களித்தார்கள். தொகுதி மக்களின் எண்ணவோட்டத்தை புறந்தள்ளி, ஜனநாயகத்தை விலைப்பேசி கேலிக்கூத்தாக்கும் தவெக தாங்கள் தூயசக்தி என சொல்லிக்கொள்வது,  ஹிட்லர் ஜீவகாருண்யத்தை பின்பற்றினார் என்பது போல் உள்ளது.

Also Read: Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

கறை படிந்த கட்சிகளில் முதலிடம்

விஜயை நம்பி வந்த சிலர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காருக்கு பாதுகாப்புக்கு நின்ற கேவலத்தை பதவி ஆசையில் விஜயபாஸ்கர்கள் ஏற்கலாம், அவர்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் ஏற்கிறார்களா என்பதை நிர்மல்குமார் கேட்டு சொல்வாரா?.. நாளையே தேர்தல் வைத்தாலும் 200 தொகுதிகளில் வெல்வோம் என சொல்லிக்கொண்டே, மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கும் வாங்கும் தப்பிலித்தனத்தை செய்யும் தவெக, தமிழக வரலாற்றில் கறைபடிந்த கட்சிகளில் குறுகிய காலத்தில் முதலிடம் பெற்று சாதனையை படைத்திருக்கிறது என்பது நிர்மல்குமாருக்கு புரிகிறதா? தவெக முதலிடம் பெற்றது இதில் மட்டுமே.

தவெகவின் இந்த உயரம் தகுதி மற்றும் கடின உழைப்பினால் கிடைத்தது அல்ல, தப்பித்தவறிய அதிர்ஷ்டகாற்றில் கோபரத்தில் ஒட்டிக்கொண்ட சருகுகள் தான் நீங்கள் அனைவரும்.  காலச்சக்கரத்தில் காற்றின் வேகம் குறையும் போது சருகுகள் தரையில் விழுந்து தடமில்லாமல்  மக்கித்தான் போகும் என்பதை பலகட்சி பலராமன்கள் உணர்ந்து கொள்வது நலம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget