அதிமுகவில் இரட்டை தலைமை நீடித்து வந்த நிலையில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற விவகாரம் பெரிய பிரச்னையாக உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. 

Continues below advertisement


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


கூட்டம் முடிந்தபின்னர் இருவரின் வீடுகளில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே அதிமுக பொதுக்குழு சென்னையில் 23 ஆம் தேதி கூட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கும் மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கும் வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டது.


"எங்களின் ஒற்றை தலைமையே" வருக வருக எனவும் புரட்சி தலைவரின் வழியில் கழகம்! புரட்சி தலைவியின் வழியில் கழகம்! தற்போது "எடப்பாடியார் வழியில் கழகம்" எங்களின் தலைமையே வருக என வசனங்களுடன் பதாகைகள் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமையே வருக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரே வருக என கோஷங்கள் இட்டனர். 


முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரிய அளவில் பணம் செலவழித்து வருவதாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர்.


திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பழனிசாமிக்கு ஆதரவாக பதாகைகள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிமுக மாவட்ட கழக கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக, பழனிசாமியை ஒற்றை தலைமை ஏற்க வேண்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அம்பத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான அலெக்சாண்டர் பழனிசாமிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண