17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
17 வயது இளம்பெண் காரில் கடத்தப்பட்டு, காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

பள்ளி முடித்து சாலையில் நடந்து சென்ற 17 வயது சிறுமி
திருச்சி மாநகர் கீழப்புலிவார் ரோடு பகுதியில் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவி, சாதாரணமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார் அவருக்கு அருகில் திடீரென நின்றது. காரில் இருந்த மர்மக் கும்பல் சிலர், கண்ணிமைக்கும் நேரத்தில் இளம் பெண்ணை வலுக் கட்டாயமாக இழுத்து காருக்குள் தள்ளி விட்டு தப்பியோடியுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த துணிகர கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் உடனடியாக காரைத் துரத்த முயன்றனர் என்றாலும் , கார் வேகமாக சென்று விட்டது. காருக்குள் இருந்த மர்ம நபர்கள், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சாலையோரத்தில் வீசி சென்ற கும்பல்
பெண்ணின் அலறல்களைப் பொருட்படுத்தாமல் அவரை சீரழித்த கும்பல், பின்னர் அவரை சாலையோரத்தில் வீசி விட்டு தப்பியோடியது. உடல் மற்றும் மனரீதியான கடும் பாதிப்புக்கு உள்ளான சிறுமி , அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மனநல ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல் துறை , காவல் ஆணையரின் உத்தரவின்படி சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கீழப்புலிவார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள CCTV கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
போலீசார் தீவிர விசாரணை
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ரகசியம், பதிவு எண் மற்றும் கும்பலின் அடையாளம் ஆகியவற்றை கண்டறிய சைபர் க்ரைம் போலீசாரும் இணைக்கப்பட்டுள்ளனர். நகரின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மாவட்ட எல்லையைத் தாண்டி விடாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மர்மக் கும்பல் உள்ளூர் அல்லது வெளியூர் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் திருச்சி நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பயம் பரவியுள்ளது. சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சிலர் கீழப்புலிவார் ரோடு பகுதியில் போராட்டத்திலும் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















