வாழும் சமூகத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தை கடந்து புரிந்துகொள்ளப்படாத பாலினமாக திருநங்கை, திருநம்பியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவுதான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டாலும் மக்கள் இவர்களை பார்க்கும் பார்வை மறுபட்டதாகவே இருந்து வருகிறது. 


கல்வி, விளையாட்டு, அரசு அதிகாரிகள் என இவர்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. இருப்பினும், இவர்களை இந்த சமூகம் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு நபரால் புறந்தள்ளப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 


அந்த வரிசையில், தற்போது சென்னை எழும்பூர் பகுதியில் டேஸ்டி ஹட் என்ற உணவகம் நடத்திவரும் திருநங்கை  சாய்னா பானு தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இதுவே ஒரு ஆண்கள் வச்சிருக்க கடைக்கு, பெண்கள் வச்சிருக்க கடைக்கு போவீங்க வருவீங்க...திருநங்கை வைத்திருக்க கடைக்கு வருவீங்களா??? சாப்பிடுவீங்களா??? அப்புறம் எதுக்கு சொல்றீங்க நீங்க வேலை செய்ய மாட்டீங்களா???? உழைக்க மாட்டீங்களா???? ஏன் சொல்லுவீங்க???? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



அன்றாட உழைக்கும் மக்களின் நிலைமைபோல் தான் இவர்களும், வாழ்வில் நாமும் தனித்துவம் பெற வேண்டும், சக மனிதர்களை போல நாமும் உயர வேண்டும் என்று வாழ்க்கையை கனவுகளோடு நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். அப்படி இருக்கையில் பாலின மாறுபட்டால் இயற்கையாகவே ஏற்படும் தோற்றத்தை இன்னும் ஒரு சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர்.


திருநங்கை  சாய்னா பானு தன் மனதில் எவ்வளவு கனவுகளோடு உணவகத்தை திறந்து, தங்களைபோல் உள்ள மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க விரும்புகிறார். இருப்பினும் அவர்கள் உணவகத்திற்கு யாரும் வராததால் மனவேதனை அடைந்து அப்படி ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். 


இதைபார்த்த ஒரு சிலர், அதை ஷேர் செய்தும், சாய்னா பானுவிற்கும் ஆதரவாகவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை கண்ட திருநங்கை சாய்னா பானு, மீண்டும் ஒரு பதிவில், என்னுடைய போஸ்ட்டை ஷேர் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

இது என்னுடைய மனக்குமுறல் இல்ல மனவேதனை...அதற்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டு, எங்களுக்கும் ஒரு விடிவு காலம் வரும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 


 



நல்லது நடக்கும் என்று இவர்களை நம்பிக்கை உடையவர்களுக்கு ஆதரவு கொடுத்து துணையாய் நின்று தோழனாய் நிற்போம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண