Top 10 News Headlines: ”இந்தியாவை காக்கும் முன்னெடுப்பு” விஷாலின் தங்கையின் கணவர் மீது வழக்கு - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 21: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

”இந்தியாவை காக்கும் முன்னெடுப்பு”
"தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக வெற்றியடையும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவிப்பு! பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து முல்லைத் தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் நேற்று இரவு நடைபெற்றது
அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
மதுரை கீழவசால் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
விஷாலின் தங்கை கணவர் மீது வழக்கு
நடிகர் விஷால் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு! போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகத் தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது வழக்கு. ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்
2025ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 118வது இடம். இப்பட்டியலில் பாகிஸ்தான், பாலஸ்தீனம், நேபாளம், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! அக்கறை, உணவை பகிர்ந்து கொள்வது, சமூக ஆதரவு, சுதந்திரம் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது
யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை
உத்தரப் பிரதேசம்: மதுராவில் தீரா வயிற்று வலியை குணப்படுத்த யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜேஷ் பாபு (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதி. பல மருத்துவர்களிடம் சென்றும் வலிக்கான காரணம் தெரியாததால் விபரீத முடிவை எடுத்துள்ளார். வயிற்றை கிழித்ததும் என்ன செய்வது எனத் தெரியாமல் 11 தையல் போட்டு தைத்துள்ளார். வலி அதிகரிக்கவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தியா மீது ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்கும் என நம்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா விதிக்கும் வரிக்கு இணையான பரஸ்பர வரிவிதிப்பை வரும் ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்.. யூடியூபர் Mr.Beast-ன் புதிய முன்னெடுப்பு!
வட ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் Mr.Beast. கோகோ பண்ணைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார். இதனால் முதல் வாரத்திலேயே ஒரு பள்ளியில் 10% வருகை அதிகரித்துள்ளதாக ஆச்சர்யம் பொங்க தெரிவித்துள்ளார்
நாளை தொடங்குகிறது ஐபிஎல்
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதனிடையே, வரும் ஞாயிறன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிக்காக, மும்பை அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.
டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்வாரா கோலி?
ஐபிஎல் தொடரில் அதிகமுறை 'ஆரஞ்சு தொப்பி' வென்ற டேவிட் வார்னர் சாதனையை விராட் கோலி சமன் செய்வார் என எதிர்பார்ப்பு. 2016(973), 2024(741)ல் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பியை 2முறை ஆர்சிபி வீரர் விராட் கோலி வென்றார்; 2015,2017,2019 ஆகிய 3 ஆண்டுகளில் டேவிட் வார்னர் 'ஆரஞ்சு தொப்பி' வென்றுள்ளார்; ஐபிஎல்-ன் ஒருதொடரில் அதிக ரன் (973) அடித்த வீரர் கோலி ன்பது குறிப்பிடத்தக்கது