தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த சந்தைக்கான தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து, தக்காளி மொத்த விலை கிலோ 110 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சில்லறை விலையானது ஏற்கனவே ரூ.150 ஐ கடந்து விற்பனயாகி வருகிறது. இதனால் மக்களின் சிரமத்தை சற்று குறைக்கும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.


முதற்கட்டமாக வடசென்னயில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22  என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


ஏற்கனவே 82 ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மக்களின் நலன் கருதி 300 ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் எந்த ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது ?


பூங்காநகர் பகுதியில்: TV நகர் -2, திருவல்லீஸ்வரர் நகர்-2, முகப்பேர் -2E, முகப்பேர் -2, திருநகர், கொரட்டூர்-1A, அகத்தியர் நகர்-2, சிட்கோ-2, சிவன்கோயில் தெரு-1B, குஜ்ஜி தெரு, ss தேவர்-1, பில்கிங்டன் ரோடு, SBI காலனி, NSK நகர்-1, 108 PA கோயில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில்: சேலையூர் – 1, பள்ளிக்கரணை 1, யஷ்வந்த் நகர் (பத்மாவதி நகர் -1),  மகாலட்சுமி நகர் – 1, பெருங்களத்தூர் -1, தாம்பரம் – 2, ரமேஷ்நகர் – 1, நேஷனல் தியேட்டர் – 1, மல்லிகா நகர், அனகாபுத்தூர் – 1, பம்மல் – 3, பொழிச்சலூர் – 4,  நாகல்கேணி 2, சிட்லபாக்கம் – 2, சிட்லபாக்கம் – 5, அஸ்தினாபுரம் (மகேஸ்வரி), வளசரவாக்கம் – 1, நந்தம்பாக்கம் 1, பட்ரோடு – 5, இராமாபுரம் – 1, இராமாபுரம் – 2, மடிப்பாக்கம் -5, மடிப்பாக்கம் -8, மடிப்பாக்கம் 11, போரூர் – 7, Porur - 9 (Sabary Nagar), வளசரவாக்கம் – 4, வளசரவாக்கம் – 5, மதுரவாயில் - 3 (லஷ்மி நகர்), வானகரம், கந்தன்சாவடி – 2, காரப்பாக்கம் 2 ஆகிய கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


திருவல்லிக்கேணி பகுதியில்: எழும்பூர் -1, இராயப்பேட்டை -2, சிந்தாதிரிபேட்டை -5, பெசன்ட் நகர் 1, சாஸ்திரி நகர் 1, அவ்வை நகர், தேனாம்பேட்டை 1, ஆழ்வார் பேட்டை -1, ஸ்ரீராம் நகர் -2, தி.நகர்-4, சேத்துப்பட்டு -3, கோடம்பாக்கம் -2, நுங்கம்பாக்கம் -1, லட்சுமி புரம், கோபாலபுரம், ஆர்.ஏ புரம்-5, சைதாப்பேட்டை -11, சின்னமலை- 2, கிண்டி -2, சைதாப்பேட்டை -1, கே.கே நகர் -1, கே. கே நகர் -2, கே கே நகர்- 5, மாம்பலம் -4, மாம்பலம் -5, சாலிகிராமம் -9, வேளச்சேரி 1 (ம) 2, வேளச்சேரி 17, ஆதம்பாக்கம் 1 (ம)11 ஆகிய கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


வடசென்னை பகுதிகளில்: தக்கர் லேன், வெங்கடாசலம் தெரு, வீராக்குடி, ஆர்.கே நகர் -2, எருக்கஞ்சேரி -2, எருக்கஞ்சேரி -6, மணலி -4, இடிபிஎஸ்-2, நேத்தாஜி நகர்-4, எஸ்.பி கோயில் ஆகிய கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது