தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள். 2.34 கோடி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் 33 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர் என கடந்த ஜனவரி மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இதனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இன்றுடன் அந்த கால அவகாசம் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதரை இணைத்துக் கொள்ள முடியும்.