டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்த வரையில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.

Continues below advertisement

குரூப்-4 தேர்வு

இந்நிலையில் தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தணட்லர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியிட்டது. 

இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. நவம்பர் 4,5 தேதிகளில்.!

Continues below advertisement

 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்

இதற்கான இணையவழி விண்ணப்பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவா்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இதையும் படிங்க: Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

நாளை கடைசி நாள்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 5-ம் தேதி அதாவது நாளை வியாழக்கிழமையுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு 2027ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.