தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்று பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஒரு கேள்விக்கு பதில்களுக்கு அளிக்கப்படும் நான்கு தேர்வுகளில் ஒன்றில் மேலே எதுவும் இல்லை என்பதற்கு பதிலாக, பதில் இல்லை என்று இந்தது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வினாத்தாளில் இவ்வாறு கேட்கப்பட்டிருந்ததை கண்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.