மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல்,அவுட்-சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமிக்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாகவே சென்னை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் அதிகாரிகளுடன், 19 தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்திய 18 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 19வது முறையாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2019 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியின்படி 3% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி கணக்கிடப்பட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
இதன்மூலம் 75,978 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பெறுவார்கள். 3 சதவீதம் ஊதிய உயர்வால் பயனடையும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 62,548 ஆகும். ஊதிய உயர்வால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.527 கோடி கூடுதலாக செலவாகும். இந்த முடிவானது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.