தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏப்ரல் 7ஆம் தேதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தமான் பகுதியில் 60 கிலோமீட்டர் தூரம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அங்கு மீன்வர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக எங்கு மழை பெய்யும் என்பது குறித்து தற்போது தெளிவாக தெரியவில்லை. 


இதற்கிடைய தமிழ்நாடு பகுதிகளில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி காற்று விசை காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையைம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் நேற்று அம்பாசமுத்திரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், தேவகோட்டையில் 8சென்டிமீட்டர் மழையும், பேச்சிபாறை மற்றும் தஞ்சாவூரில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கத்தை மழை பெய்து குறைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண