தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இன்றைய நிலவரம்


21.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


22.01.2023 மற்றும்  23.01.2023:  தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


டெல்டா மாவட்டங்களில் மழை


தமிழகத்தில் வரும் 22 மற்றும் 23ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


22.01.2023 மற்றும்  23.01.2023:  தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


21.01.2023 மற்றும் 22.01.2023: மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என வானிலை மையம் தெரிவித்துள்ளது.