தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாநிலத்தின் பல இடங்களிலும் மழை விடாமல் பெய்து வருகிறது. 

Continues below advertisement

வங்கக்கடலில் புதிய புயலா?

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால், வங்கக்கடலில் புயல் உருவாகுமா? என்பது வரும் 23ம் தேதிக்குள் தெரிய வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வரும் 21ம் தேதிக்குள் கரைக்கு  திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இயல்பை விட அதிக புயல்:

தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போது வரை 14 சதவீதம் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழைப்பொழிவைக் காட்டிலும் 58 சதவீதம் அதிகம் ஆகும். இன்று விருதுகநர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னிாயகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் அபாயம் உள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக பலரும் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வரும் சூழலில் தொடர் மழை காரணமாக பலரும் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் மக்கள் அவதிப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது 7 மணி நேரம் வரை செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக வெள்ள அபாயம் உள்ள பகுதியில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.