தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக, மண்டல வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் உருவாக வாய்ப்பு:
இதுதொடர்பான அறிக்கையில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். அதைதொடர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். பின்பு தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே 11ம் தேதி வரை வடக்கு - வடமேற்கு திசையில் கிழக்கு மத்திய வங்கக் கடல் நோக்கி நகரும். அதன் பிறகு, வடக்கு - வடகிழக்கில் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு எச்சரிக்கை:
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனியில் இன்று கனமழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதல் மழை:
தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கத்தை விட கூடுதலாக 114 சதவிகிதம் அளவிற்கு பெய்துள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 1 முதல் மே 7ம் தேதி காலை வரை, வழக்கமாக 77.5 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பொழியும். ஆனால், நடப்பாண்டில் ஆண்டில் அதே காலகட்டத்தில் 165.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது.
08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
08.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.