Rain Alert: வெளியே போறீங்களா? அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் நடுப்பகுதி வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்தது. இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் நடுப்பகுதி வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். பள்ளிகள் திறப்பும் ஜூன் மாதத்தில் இரண்டு முறை தள்ளிப் போனது. வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மழை பெய்து வருகிறது. 

முன்னதாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நீலகிரி, ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் சில தகவல்கள் 

29.06.2023 முதல் 01.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

ஜூன் 28 ஆம் தேதிதென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

 

Continues below advertisement