அடுத்த 3 மணி நேரம்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:


”தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


பென்னாகரம் (தர்மபுரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி) தலா 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 4, தாளவாடி (ஈரோடு), தர்மபுரி PTO (தர்மபுரி), குன்னூர் PTO (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 3, குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), தர்மபுரி (தர்மபுரி), கேத்தி (நீலகிரி), மேட்டூர் (சேலம்), பாலக்கோடு (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோடநாடு (நீலகிரி), பாலக்கோடு ARG (தர்மபுரி) தலா 2, பொன்னை அணை (வேலூர்), எமரால்டு (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஏற்காடு (சேலம்), வேலூர் (வேலூர்), பர்லியார் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), அம்முண்டி (வேலூர்), போளூர் (திருவண்ணாமலை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), சண்முகாநதி (தேனி), ஆனைமடுவு அணை (சேலம்), கோடிவேரி (ஈரோடு), போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி) தலா 1.


அதிகபட்ச வெப்பநிலை : 


அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.


வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசியது


அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (இயல்பை விட +6.7° செல்சியஸ் அதிகம்) மற்றும்  ஈரோட்டில் 43.4° செல்சியஸ் (இயல்பை விட +5.3° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.2° செல்சியஸ், திருச்சியில் 42.1° செல்சியஸ், திருப்பத்தூரில்  41.8° செல்சியஸ், திருத்தணியில் 41.4° செல்சியஸ்,  தர்மபுரியில் 41.2° செல்சியஸ்,   மதுரையில்  (விமான நிலையம்) 41.1° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 41.0° செல்சியஸ், பாளையங்கோட்டையில் 40.6° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், சேலத்தில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.


இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ்,     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 36° – 38° செல்சியஸ்  மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  


அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.1° செல்சியஸ் (+3.0° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ் (+1.2° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.